(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 ஓட்டங்களால் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இலங்கை முயற்சிக்கவுள்ளது. அதேவேளை, ஆறுதல் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் செல்வதை அவுஸ்திரேலியா பெரிதும் விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை இரண்டு கட்டங்களில் இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துனித் வெல்லாலகேவுடனும் ஏஷான் மாலிங்கவுடனும் பெறுமதிமிக்க இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி சதம் குவித்த அணித் தலைவர் சரித் அசலன்க ஆட்டத்தின் பிடியை இலங்கை பக்கம் திருப்பினார்.
எனினும் இலங்கை பெற்ற 214 ஓட்டங்களை அவுஸ்திரேலியா இலகுவாக கடந்துவிடும் என எண்ணப்பட்டது.
ஆனால், அசித்த பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோர் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய துடுப்பாட்டததை ஊடறுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
முதலாவது போட்டியில் முன்வரிசையில் பிரகாசிக்கத் தவறிய பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் ஆகிய நால்வரும் நாளைய போட்டியில் நிதானத்தைக் கடைப்பிடித்து கணிசமான ஓட்டங்களைப் பெற முயற்சிக்கவேண்டும்..
அவர்கள் அனைவரும் சரித் அசலன்கவின் அணுகுமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என முன்னிலையில் இருக்கும் இலங்கை, முதலாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் நாளைய போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது.
ஒருவேளை மாற்றம் செய்வதாக இருந்தால் ஜனித லியனகே நீக்கப்பட்டு நிஷான் மதுஷ்க அல்லது ஜெவ்றி வெண்டசே அணியில் இணைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இதேவேளை, இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியா, இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டி அந்த உற்சாகத்துடன் பாகிஸ்தான் செல்ல முயற்சிக்கும் என்பது நிச்சயம்.
முன்வரிசையில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் உட்பட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் நாளைய போட்டியில் அதிகபட்ச திறமையை வெளிப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு களம் இறங்கவுள்ளனர்.
இலங்கைக்கு அதன் வேகப்பந்துவீச்சாளர்கள் சோதனையைக் கொடுத்தது போன்று சுழல்பந்துவீச்சாளர்கள் இரண்டாவது போட்டியில் பந்துவீச முயற்சிப்பர்.
ஆர்.பிரேமதாச ஆடுகளம் பொதுவாக மந்தகதியைக் கொண்டிருப்தால் இரண்டாவது போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்கள் சற்று நேரம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாட வேண்டி வரும். இந்த ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா மீது இலங்கை ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.
எவ்வாறாயினும் இரண்டு அணிகளும் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே அல்லது நிஷான் மதுஷ்க அல்லது ஜெவ்றி வெண்டசே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஏஷான் மாலிங்க, அசித்த பெர்னாண்டோ.
அவுஸ்திரேலியா: மெத்யூ ஷோர்ட், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், கூப்பர் கொனலி, ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), மானுஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, சோன் அபொட், நேதன் எலிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், அடம் ஸம்ப்பா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM