ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர் புய் தான் சன் இடையே கலந்துரையாடல்

Published By: Vishnu

13 Feb, 2025 | 09:32 PM
image

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு  தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் (Bui Thanh Son)தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டின் போது புதன்கிழமை (12) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடிய போதே புய் தான் சன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 55 வருடங்களாக வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கை மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை சாதகமாக மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் போதிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விவசாயம், கல்வி, மதம், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் விமான சேவைகள் போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாம் முதலீட்டாளர்களுக்கு  அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12