(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் புதன்கிழமை (12) நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக இந்த மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
இந்தத் தொடரில் 3ஆவது அணியாக நியூஸிலாந்து பங்குபற்றுகிறது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஐசிசி ஒழுக்க விதிகளின் 2.12ஆம் இலக்க பரிந்துரையை மீறிய குற்றத்திற்காக வேகப்பந்தவீச்சாளர் ஷஹீன் ஷா அப்றிடிக்கு அவரது போட்டி கட்டணத்தில் 25 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியின் 28ஆவது ஓவரில் மெத்யூ ப்றீட்ஸ் ஓட்டம் ஒன்றை எடுக்கையில் ஷஹீன் ஷா அப்ரிடி வேண்டுமென்றே அவருக்கு இடையூறு விளைவித்துள்ளார். இதன் விளைவாக இருவரினதும் உடல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதுடன் இருவரும் கடுமையான வாக்குவாத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
போட்டியன் 29ஆவது ஓவரில் இடம்பெற்ற மற்றொரு சந்தர்ப்பத்தில் டெம்பா பவுமா ஆட்டம் இழந்தபோது அவருக்கு மிக நெருக்கமாக சென்று சவுத் ஷக்கீலும் மாற்றுவீரர் கம்ரன் குலாமும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் ஒழுக்க விதிகளின் 2.5ஆம் இலக்க பரிந்துரையை மீறியிருந்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 10 வீத அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதங்களைவிட மூன்று வீரர்களுக்கும் தலா ஒரு தகுதிநீக்க புள்ளி விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று வீரர்களும் அபாராதங்களை ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணைகளுக்கு அவசியம் ஏற்படவில்லை என ஐசிசி அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM