இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமடா, கடந்த 10ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தார். அங்கு ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஜப்பானிய மொழி ஆய்வகத்தைப் பார்வையிட்டதுடன் பதில் துணைவேந்தர், ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஜப்பானிய மொழி ஆய்வகத்திற்கு விஜயம் செய்தபோது, தூதர் இசொமடா (ISOMATA) ஜப்பானிய மொழியைப் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் மொழிப் பயணத்தைத் தொடர ஊக்குவித்தார்.
ஜப்பானில் வேலை வாய்ப்புகளைத் பெற்றுக்கொள்வது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவித்தல் போன்ற ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதன் நன்மைகளை எடுத்துரைத்தார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் JICA தன்னார்வலரான நாகாய் ஆற்றிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
மொழி ஆய்வகத்தை பார்வையிட்ட பிறகு, தூதர் இசொமடா, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களைச் சந்தித்தார். அங்கு அவர்கள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பு மற்றும் கல்வி பரிமாற்றங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
இந்த விஜயம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கல்வி மற்றும் கலாசார உறவுகளைப் பிரதிபலிக்கிறது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே மொழி கற்றல் மற்றும் கல்வி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தூதரகம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM