இராமநாதபுரம் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த இஞ்சி இன்று (13) அதிகாலை தோப்பு வலசை கடற்கரை பகுதியில் தமிழக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பொதிகள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டுப் படகுகளில் சமீபகாலமாக அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இன்று அதிகாலை திருப்புல்லாணியை அடுத்த தோப்புவலசை கடற்கரையிலிருந்து படகு மூலமாக உலர்ந்த இஞ்சி (சுக்கு) இலங்கைக்கு கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருங்கிணைத்த குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் சேதுகரையிலிருந்து தோப்புவலசை வரை கடற்கரை ஓரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தோப்புவலசை கடற்கரை பகுதியில் 50 சாக்கு மூடைகளில் சுமார் 2 தொன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி மூடைகள் படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து உலர்ந்த இஞ்சி மூடைகளை பறிமுதல் செய்த பொலிஸார் அவற்றை திருப்புல்லாணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், அவற்றை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சி இந்திய மதிப்பில் 10 இலட்சம் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM