(நெவில் அன்தனி)
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெறவுள்ள 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான சிறப்பு தூதுவர்களாக 2017இல் பாகிஸ்தானை சம்பியனாக்கிய அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மதுவுடன் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்களான ஷிக்கர் தவான் (இந்தியா), டிம் சௌதீ (நியூஸிலாந்து), ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா) ஆகியோர் பெயரிடப்ப்டுள்ளனர்.
மினி உலகக் கிண்ண கிரிக்கெட் என வருணிக்கப்படும் சம்பயின்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடைபெறவுள்ளது.
எட்டு நாடுகள் பங்குபற்றும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டின் ஒன்பதாவது அத்தியாயம், பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கராச்சியில் பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தூதுவர்கள், இரசிகர்களுக்கு சிறந்த அனுவங்களைப் பெற்றுக்கொடுக்கவுள்ளனர்.
சர்ப்பராஸ் அஹ்மத் , 2017ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பாகிஸ்தான் அணியில் தலைவராக விளையாடி இருந்தார்.
அந்த வருட இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டு பாகிஸ்தான் சம்பியனாகி இருந்தது.
இங்கிலாந்தில் 2013இல் நடைபெற்ற ஐசிசி சம்பயின்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் வரவேற்பு நாடான இங்கிலாந்தை 3 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்திய அணியில் ஷிக்கர் தவான் விiயாடியிருந்ததார்.
அவ் வருடம் 5 போட்டிகளில் 363 ஓட்டங்களைக் குவித்த ஷிக்கர் தவான் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.
சகலதுறை ஆட்டக்காரரான ஷேன் வொட்சன் இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்த அவுஸ்திரேலிய (2006, 2009) அணிகளில் இடம்பெற்றிருந்தார்.
இந்த மூவருடன் நியூஸிலாந்தின் வெகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீயும் சிறப்பு தூதுவராக நியிமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM