திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்ளுர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெயதுள்ளனர்.

குறித்த 21 மீனவர்களும் சட்டவிரோத மீன்பிடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவேளையிலேயே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினர் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும், 2 சட்டவிரோத மீன்பிடி வலைகளையும் 294 கிலோ கிராம் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் மீன்களையும் திருகோணமலை உதவி மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.