ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை ஐ.நா. உரிமை சாச­னங்­களின் அடிப்­ப­டையில் நிரந்­த­ர­மாகத் தீர்த்து வைக்­க­வேண்டும். அத்­துடன் போர்க் குற்ற விசா­ர­ணை­களை ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையின் பிரே­ர­ணையின் அடிப்­ப­டையில் முறை­யாக நடத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்­கவேண்டும் என்று வட மாகாண முத­ல மைச்சர்சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

என்னை என் கட்­சியின் ஒரு பகு­தி­யி­னரும் வட,தென்­னி­லங்­கையின் ஒரு பகு­தி­யி­னரும் ஊட­கங்­க­ளூ­டாக மூளை சலவைசெய்­யப்­பட்­டுள்ள ஒரு தீவிர போக்­கு­டை­யவர் என்­கின்­றார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் தீவி­ர­வா­தி­யல்ல. எம் மக்­களின் மனோ­நி­லையைப் பிர­தி­ப­லிக்கும் ஒரு­வன்நான் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எனக்குச் சிங்­கள மக்­க­ளுடன் எந்த வித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்­க­ளின அடிப்­படை உரித்­துக்­களை, அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்தி செய்ய அர­சி­யல்­வா­திகள் முன்­வ­ரா­விட்டால் அதனைச் சுட்டிக் காட்­டாது என்னால் இருக்க முடி­யாது எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்­பா­ணத்தில் நேற்று கொண்­டா­டப்­பட்ட தேசிய பொங்கல் விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

வடக்கு முதல்வர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

சகல சம­யத்­த­வரின் பண்­டி­கை­க­ளையும் அச்­ச­ம­யத்­தினர் வாழும் இடங்­களில் நாடு பூரா­கவும் கொண்­டாட வேண்டும் என்ற எண்­ணத்தின் பிர­தி­ப­லிப்­பாக இன்­றைய இந்த நிகழ்வு நடை­பெ­று­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. சர்­வ­ம­தங்­களின் நிகழ்­வு­களில் கலந்து கொள்­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும். 1960 களில் சர்­வ­மத சம்­மே­ள­னத்தின் உப செய­லா­ள­ராக நான் இருந்தேன். அப்­போ­தைய பிர­தமர் டட்லி சேனா­நா­யக பிர­த­ம­ராக இருந்த காலத்தில் எங்கள் சம்­மே­ளனம் இதையே செய்­தது. மற்­ற­வர்­களின் மத நிகழ்­வு­களில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலி­யு­றுத்தி வந்தோம். அப்­போ­தைய மல்­வத்த மகா நாயக்க தேரோவை யாழ்ப்­பாணம் அழைத்து வந்து நயி­னா­தீ­வுக்கு அழைத்துச் சென்றோம். அவர் இந்துக் கோயி­லையும் தரி­சித்து பௌத்த விகா­ரைக்கும் விஜயம் செய்தார். இப்­போது அந்த சம்­மே­ள­னத்தின் உறுப்­பி­னர்­களில் உயி­ரோடு இருப்­பவர் நான் மட்டும் தான் என்று நினைக்­கின்றேன்.

அதன் பின்னர் நிலை மாறி­விட்­டது.இன்­றைய நிலையை நாம் எடுத்துப் பார்த்தால் எமது வட­மா­காணம் அதன் அவ­லங்­க­ளிலும் ஆற்­றா­மை­க­ளிலும் இருந்து இன்னும் மீள­வில்லை. அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீங்­கப்­ப­ட­வில்லை. தனியார் காணி­களும் மக்கள் நலம் சார்ந்த கட்­டி­டங்­களும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. காண­மற்­போனார் விப­ரங்­களை அவர்­களின் சுற்­றத்தார் இன்­னமும் தேடிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். முன்னால் போரா­ளிகள் இயல்பு வாழ்க்­கைக்குத் திரும்ப இன்­னமும் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இரா­ணுவ பிர­சன்னம் குறைக்­கப்­ப­ட­வில்லை. மாகா­ணத்தின் அலு­வல்­களில் மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீடு குறைந்­த­பா­டில்லை. போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. மீன­வர்­களின் பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. .வித­வை­களின் வாழ்க்­கையில் மறு­ம­லர்ச்சி ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இவ்­வாறு போரினால் பாதிக்­கப்­பட்ட எமது மக்­களின் அவல நிலையைப் பட்­டியல் இட்டுக் கூறிக் கொண்டே செல்ல முடியும்.

எம்மால் பத­விக்குக் கொண்டு வரப்­பட்ட இந்த அர­சாங்கம் ஜன­நா­யக சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்தும் இருக்க முடி­யாது. எனினும் மூன்று விட­யங்கள் இன்று மிக முக்­கிய நிலையைப் பெற்­றுள்­ளன. ஒற்­றை­யாட்சி அர­சியல் யாப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்தல்இ தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை ஐ.நா. உரிமை சாச­னங்­களின் அடிப்­ப­டையில் நிரந்­த­ர­மாகத் தீர்த்து வைத்தல்இ போர்க் குற்ற விசா­ர­ணை­களை ஐ.நா. பிரே­ர­ணையின் அடிப்­ப­டையில் முறை­யாக நடத்தி நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகி­ய­னவை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. இவற்றை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­வது எமக்குத் தெரிந்­ததே. ஆனால் எவ்­வா­றான அர­சியல் மாற்றம் நடை­பெறும், எவ்­வா­றான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்­றங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நீதியைப் பெறு­வார்­களா என்­பதில் எமக்கு மயக்­க­நி­லையே இருந்து வரு­கின்­றது.

தென்­னா­பி­ரிக்­காவில் இப்­பேர்ப்­பட்ட பிரச்­ச­னைகள் தீர்க்க வேண்­டி­யி­ருந்த போது அவற்றை அர­சியல் ரீதி­யாகத் தீர்த்து விட்டே “உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை” அமைத்­தார்கள். இங்கு 67 வரு­ட­கால பிரச்­ச­னைகள் தொடர்ந்­தி­ருக்கும் போதே இப்­பேர்ப்­பட்ட நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்ளோம். மக்­களின் மன­மாற்றம் அவ­சியம் என்­பதை நாங்கள் உணர்­கின்றோம். ஆனால் உண்­மையில் எமது மக்­களில் பெரும்­பான்­மை­யினர் தைப்­பொங்கல் நாளில் விழாக் கொண்­டாடும் மனோ­நி­லையில் இல்லை என்­பதே யதார்த்தம்.

எடுக்கக் கூடிய பல நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­ய­வர்கள் எடுக்­காது இருப்­பதால் இந்த மனோ­நி­லைக்குள் நாங்கள் அமிழ்ந்து உழன்று கொண்­டி­ருக்­கின்றோம். அவற்றை எடுக்க எமது மத்­திய அர­சாங்கம் முன்­வர வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட எமது மக்­களின் நிலையை கொழும்பில் இருந்து உணர முடி­யாது. என்னைப் போல் கொழும்பில் பிறந்து வாழ்ந்து விட்டு இங்கு வந்து சாதா­ரண மக்­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருக்கும் போதுதான் அவர்­களின் அவ­லங்கள், ஆற்­றா­மைகள், சிந்­த­னைகள், சினங்கள் யாவையும் புரியும்.

என்னை என் கட்­சியின் ஒரு பகு­தி­யி­னரும் வடஇதென்­னி­லங்­கையின் ஒரு பகு­தி­யி­னரும் ஊட­கங்­க­ளூ­டாக மூளை சலவை செய்­யப்­பட்­டுள்ள ஒரு தீவிர போக்­கு­டை­யவர் என்­கின்­றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவி­ர­வா­தி­யல்ல. எம் மக்­களின் மனோ­நி­லையைப் பிர­தி­ப­லிக்கும் ஒரு­வன்நான். ஐம்­பத்தி இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் சட்­டத்­த­ர­ணி­யாகப் பத­வி­யேற்ற நான் உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக கட­மை­யாற்­றிய பின் இன்று எமது மக்­களின் வழக்கைக் கையேற்­றி­ருக்­கின்றேன்.

தேர்தல் காலங்­க­ளில்த்தான் 2013இல் எனது வழக்குக் கோப்பு எனக்குத் தரப்­பட்­டது. அது தான் எமது தேர்தல் விஞ்­ஞா­பனம். அதன் அடிப்­ப­டை­யில்த்தான் நான் என் வழக்கைக் கொண்டு நடத்திக் கொண்­டி­ருக்­கின்றேன். எமது மக்­களின் மனோ நிலையைப் பிர­தி­ப­லிக்கும் வண்ணம், எமது 2013 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை முன்­னெ­டுக்கும் வண்ணம் எனது நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன. தேர்­தலில் ஒன்றைக் கூறி நடை­மு­றையில் இன்­னொன்­றிற்கு உடன்­ப­டு­வ­தாக இருந்தால் நாங்கள் மக்­களின் புதி­ய­தொரு ஆணையைப் பெற வேண்டும். அவ்­வாறு பெறா­த­வி­டத்து என்னை ஆற்­றுப்­ப­டுத்­திய அந்த ஆவ­ணத்தின் அடிப்­ப­டை­யி­லேயே எனது நட­வ­டிக்­கை­களைக் கொண்டு போக வேண்டும். அதையே நான் செய்­து­கொண்டும் வரு­கின்றேன்.

எனக்குச் சிங்­கள மக்­க­ளுடன் எந்த வித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்­க­ளின அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக் காட்டாது என்னால் இருக்க முடியாது. 67 வருடங்களாக நாங்கள் எமது மக்களின் உரிமைகளை புறக்கணித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தைஇ உடன்படிக்கைகளில் தருவதாகக் கூறியவை எவையும் இன்னமும் தந்தபாடில்லை. தந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

எனினும் எமது மத ரீதியான ஐக்கியமும் ஒன்றிணைப்பும் மென்மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வர நான் வாழ்த்துகின்றேன். அதே நேரத்தில் எமது மக்களின் ஆழ வேரூன்றியிருக்கும் பிரச்சனைகளை உரிமைகளின் அடிப்படையில் தீர்க்க யாவரும் முன்வர வேண்டும் என்றார்.