யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு : பிரதமர் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் -ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

Published By: Digital Desk 7

13 Feb, 2025 | 05:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் இலங்கையின் பாரம்பரியத்துக்கு முரண்பட்டதாக உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிகாரத்தில் இருந்த போதும், இல்லாத போதும் தேசியத்தையும், பௌத்த மதத்தையும் முன்னிலைப்படுத்தி செயற்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறியதன் பின்னர் அந்த கட்சியின் அடிப்படை கொள்கைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம்.

யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தேர்தல் செயற்பாடுகளுக்கும் நிதியளித்துள்ளதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது இந்த நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டது. இந்த நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அந்த நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தற்போது குறிப்பிட்ட விடயங்களை நாங்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்டோம். இதனால் நாங்கள் இனவாதிகளாகவும்,மதவாதிகளாகவும் ஒரு தரப்பினரால் சித்தரிக்கப்பட்டோம்.

அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்திடமிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உட்பட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நிதி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டு குறித்து நாட்டின் இரண்டாம் பிரஜையான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பிரதமர் கடந்த காலங்களில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் பௌத்த மதம், பாலினம் விவகாரத்தில் அவர் முற்போக்கான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து பிரதமர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29