புதுமுக நடிகர் பவிஷ் நாராயண் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படத்தில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்த சங்கர், ஆர் . சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன் , உதய் மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வழக்கமான காதல் கதையும், சுவராசியமான திரைக்கதையுடனும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன், நட்சத்திர நடிகர் அருண் விஜய், இயக்குநர்கள் விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' தனுஷின் இயக்கத்தில் முதன்முறையாக இசை அமைத்த அனுபவம் புதிதாகவும், மறக்க இயலாததாகவும் இருந்தது. கதையை விவரித்து இளமையான காதல் கதை என்பதால் இசையும் இளமையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் அதற்கேற்ப இப்படத்தின் இசையை உருவாக்கினோம். இந்த திரைப்படத்தில் நிறைய திறமைசாலிகளை தனுஷ் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
இதனிடையே 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற :கோல்டன் ஸ்பாரோ..' எனும் பாடல். இணையத்தில் வெளியாகி 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM