நவீன தொழில்நுட்ப உலகில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், செம்சுங் நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட கெலக்ஷி எஸ்25 கையடக்க தொலைப்பேசியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட கெலக்ஷி எஸ்25 கையடக்க தொலைப்பேசிகள் மூன்று வகைளில் காணப்படுகின்றன.
கெலக்ஷி எஸ்25, கெலக்ஷி எஸ்25 அல்ட்ரா மற்றும் கெலக்ஷி எஸ்25+ என்பவையாகும். புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புரட்சிகரமான பல்வகை திறன்களை இந்த கையடக்க தொலைப்பேசிகள் கொண்டுள்ளன. இது பாவனையாளர்களின் சாதனங்களுடனும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் தொடர்புகொள்வதற்கான முறையை மறுவரையறை செய்கிறது.
செம்சுங்க நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு பிராந்திய நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பானர் செங்வா ஷொங் குறிப்பிடுகையில்,
மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள் எப்போதும் பாவனையாளர்களின் தேவைகளை பிரதிபலிக்கின்றன. எனவே, செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தி, அனைவரும் எளிதாக கையாளக்கூடிய, தங்கள் தனிப்பட்ட தன்மையை பாதுகாக்கும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். AI-integrated OS தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கெலக்ஷி எஸ்25 கையடக்க தொலைப்பேசிகள், அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
பொதுவாக சந்தையில் உள்ள அனைத்து கெலக்ஷி எஸ்25 கையடக்கத் தொலைபேசிகளும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகளாக இருப்பதால், பாவனையாளர்கள் எந்தவித தடையும் சந்தேகமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
கெலக்ஷி எஸ்25 கையடக்க தொலைப்பேசிகள், பாவனையாளர்களின் தேவைகளுக்கேற்ப சுயமாக மாற்றமடையும் AI Companion ஐ அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தனியுரிமையை முன்னிலைப்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட தொடர்புகளை உறுதி செய்கிறது. கூகுல் உடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட Android இயங்கு தளத்தை செம்சுங் நிறுவனம் மறுவடிமைத்துள்ளது. இதன் மூலம் பன்முக ஊடகத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு, உரை, பேச்சு, படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பாவனையாளர்கள் இயல்பாக முடிகிறது.
Circle to Search மூலம் தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் URLs-ஐ உடனடியாக கண்டறிய முடியும். Context-Aware Assistance எனும் அம்சம், பகிர்வது அல்லது நிகழ்வுகளின் விபரங்களைச் சேமிப்பது போன்ற பணிகளை விரைவாக செய்ய உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட இயற்கை மொழி புரிதல் (Natural Language Understanding) மூலம், செம்சுங் Galleryஇல் குறிப்பிட்ட புகைப்படங்களை குரல் கட்டளைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
இவ்வாறு பல்வேறு பல்வேறு புதிய செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய செயல்பாடுகள் கெலக்ஷி எஸ்25 கையடக்க தொலைப்பேசிகளில் காணப்படுவதாக அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM