'நோட்டா', 'டியர் காம்ரேட்', 'குஷி', 'தி ஃபேமிலி ஸ்டார்' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, 'கிங்டம்' என பெயரிடப்பட்டு, அதற்குரிய பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் ' கிங்டம் : எனும் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமொன் டி. ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ், ஃபார்ச்சூன் ஃபோர் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் படத்தின் பெயர் மற்றும் பெயருக்கான பிரத்யேக காணொளி ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் 'கிங்டம்' திரைப்படம், எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த காணொளியில் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொண்டு உடல் தோற்றத்தை மெருகேற்றி கொண்டிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் எக்சன் காட்சிகளும் அர்த்தப்பூர்வமான வசனங்களும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, இணையத்தில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM