மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

Published By: Digital Desk 2

13 Feb, 2025 | 03:34 PM
image

இந்த உலகத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் பிறந்து, பெற்றோர்களின் ஆதரவால் கல்வி கற்று, பொருளாதார ரீதியிலான வாழ்க்கையை தொடங்கும் போது அனைவருக்கும் பல்வேறு கனவுகள் இருக்கும். இந்த சமூகத்தில் எம்முடைய அடையாளம் என்பது ஆழமாகவும், நெடியதாகவும் பதிக்க வேண்டும் என்ற ஆவலும் அதிகமாக இருக்கும்.

இதற்காக கடுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் உழைத்தாலும் உங்களுடைய பொருளாதார வலிமையை பொறுத்து தான் உங்களின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க முடியும் என்பதனை காலம் உங்களுக்கு கற்பித்திருக்கும். இதனால் தனத்தை நோக்கி தான் உங்களுடைய கவனம் எப்போதும் இருக்கும்.

இந்த தருணத்தில் தனத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அதனை முழுமையாக கடைப்பிடித்தால் நாமும் செல்வந்தராக உயர்வதுடன் சமூகத்திற்கு ஆற்ற நினைத்திருக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்ய இயலும்.

இதற்கு தேவையான பொருட்கள் : அடர் சிவப்பு வண்ண ரோஜா மலர்கள், கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம்,  சதுர வடிவிலான சிவப்பு வண்ணத் துணி.

உங்களுடைய வீட்டின் பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமியின் உருவப் படத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் அடர் சிவப்பு வண்ண ரோஜா மலரைக் கொண்டு அலங்கரிக்கவும். அந்தத் தருணத்தில் பூஜை அறையில் இருக்கும் அனைத்து கடவுளின் உருவப் படங்களுக்கும் இந்த அடர் சிவப்பு வண்ண ரோஜா மலரை கொண்டு அலங்காரம் செய்யுங்கள். உங்களுடைய வரவேற்பறையில் வைத்திருக்கும் நீர் நிரம்பிய ஜாடியில் கூட இந்த அடர் சிவப்பு வண்ண ரோஜா மலரை இடுங்கள். நீங்களும் அடர் சிவப்பு வண்ணத்திலலான உடையை உடுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு மகாலட்சுமியை வழிபடத் தொடங்குங்கள்.

மேலும் உங்களது வீட்டில் 100 கிராம் பச்சை கற்பூரம், 100 கிராம் ஏலக்காய், 100 கிராம் கிராம்பு,  இந்த மூன்று பொருட்களையும் இடித்து தூளாக்கிக் கொள்ளுங்கள். இந்த தூளினை சதுர வடிவிலான சிவப்பு வண்ணத் துணியில் சிறிதளவு வைத்து அதனை முடிச்சிட்டு, உங்களின் பூஜை அறை, வரவேற்பறை, சமையலறை, முன்பக்க அறை, பின்பக்க அறை, வாசிப்பு அறை, என வீடு முழுவதும் இதனை கட்டி தொங்க விடுங்கள். இதன் மூலம் பரவும் நறுமணம் உங்களது வீட்டில் நேர் நிலையான ஆற்றலை பரவச் செய்வதுடன் தனவசியத்தை உண்டாக்கி, உங்களுக்கான தன வரவை அதிகரிக்கச் செய்யும்.

வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை என குறிப்பிடப்படும் காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையிலான தருணத்தில் இது போன்ற தன வரவிற்கான பிரத்யேக ஆன்மீகம் சார்ந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு, இறைவனையும் மகாலட்சுமியையும் தொடர்ந்து ஒருமுகமான மனதுடன் வணங்கி வந்தால் உங்களின் செல்வ வளம் பெருகி தனவந்தராக உயர்வடைவீர். அத்துடன் மக்களுக்காக நீங்கள் செயல்படுத்த நினைக்கும் அனைத்து நலத்திட்டங்களும், அதற்கான நிதி உதவிகளும் கிடைக்கப்பெற்று, ஏழை எளிய மக்களை மகிழ்ச்சியடையச் செய்து நீங்களும் சந்தோசமடைவீர்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35