விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியீடு

Published By: Digital Desk 2

13 Feb, 2025 | 03:33 PM
image

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரும், பட மாளிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு சந்தைகளிலும் வணிக மதிப்பு கொண்ட நடிகரான விக்ரம் பிரபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. 

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள  'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சத்யராஜ், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேமிலி என்டர்டடெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்வேதா மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லவ் மேரேஜ்' தயாராகிறது. உரிய வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் தவிக்கும் ஆண்களின் உளவியலையும், காதலித்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாயகனின் வாழ்வியலையும் நகைச்சுவையாக விவரிக்கும் திரைப்படம் இது''என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் கதையின் நாயகன்- நாயகி மற்றும் கேரக்டர்களின் தோற்றம் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதே தருணத்தில் இந்த திரைப்படம் இதில் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதனால் விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30
news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39
news-image

சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இரண்டாவது...

2025-03-22 17:06:22
news-image

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ' தி...

2025-03-22 17:01:19
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட '...

2025-03-22 17:01:08
news-image

பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

2025-03-22 16:56:06