நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து விலகல் ; சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி! - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 

13 Feb, 2025 | 03:30 PM
image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகிக்கொண்டதாகவும் சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதனால் மருந்து விநியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பாரிய சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சங்கத்தின் செய்தித் தொடர்பாளரான வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவிக்கையில்,

சேவையிலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான தகைமைகளை முன்னரே பெற்றுக்கொண்டுள்ளனர். 

வெளிநாட்டு மருத்துவ சேவைகள் தொடர்பான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். 

வெளிநாடுகளில் சிறந்த வாழ்க்கைச் சூழல், பொருளாதார வளங்கள் காணப்படுவதால் அவர்கள் அங்கு தொழில் வாய்ப்புகளை தேடுகின்றனர். 

இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டில் உள்ள வைத்தியர்களையும் மருத்துவ ஊழியர்களையும் பாதுகாப்பதோடு, நிலையான பொருளாதாரத்தை  உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுகாதார சேவையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய, அரசாங்கம் ஒரு குறுகிய கால தீர்வினை காண வேண்டும். 

சுகாதார சேவை மோசமான நிலைக்குச் செல்வதை தடுப்பதற்குத் தேவையான மாற்று வழிகளை வரவு - செலவு திட்டம் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29