கடுகண்ணாவை புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகையிரத அருங்காட்சியகம் தற்போது கவனிப்பாரற்றுக் காணப்படுவதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்வையிடக் கூடிய சூழல் இல்லை என மேலும் தெரிவிக்கின்றனர்.
மேற்படி புகையிரத அருங்காட்சியகத்தில் இலங்கையில் முதலாவதாக சேவையில் அமர்த்தப்பட்ட புகையிரத இயந்திரம் அதேபோன்று பழைய புகையிரதப் பெட்டி, உட்பட பல்வேறு அம்சங்கள் ஞாபகார்த்தமாக இதில் வைக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கைப் புகையிரதத் திணைக்களமே நிர்வகித்து வந்தது.
இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்காது போனால் மிகக் குறுகிய காலத்தில் மேற்படி அருங்காட்சியக உபகரணங்கள் இத்துப் போய் பழைய இரும்புக் கடைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும் எனப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை விரைவில் புனரமைப்பு செய்தால் சுற்றுலாத் துறையினருக்கு காட்சிப்படுத்துவதுடன் கனிசமாக வருமானத்தையும் ஈட்டிக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM