மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 2

13 Feb, 2025 | 02:48 PM
image

மீகொடை, கொடகம சந்திக்கு அருகில் 1,130 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்கை குருகல பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

மீகொடை, கொடகம சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,130 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொக்கெய்ன் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டதாகவும், அதனை கொள்வனவு செய்வதற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொடகம சந்திக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கெய்ன் போதைப்பொருளை கொள்வனவு செய்ய சென்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41