காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.
காதலர் தினத்தன்று இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுதல், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துதல், மோசடிகளில் ஈடுபடுதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
காதலர் தினத்தன்று இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM