உலக அரச உச்சி மாநாடு 2025 இனை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருந்த மூன்றுநாள் விஜயத்துடன் இணைந்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுவூட்டுவதற்கான ஊக்குவிப்பும் மற்றும் நெருங்கிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தம் கைசாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மொஹமட் பின் ஹாட் அல் ஹூசெதி மற்றும் இலங்கை வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த இருதரப்பு ஒப்பந்தம், உலக சந்தைகளில் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்தவும், வௌிநாடுகளில் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கும் சட்ட வரைவொன்றை வழங்கும், முதலீட்டாளர் உரிமைகளை பாதுகாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தவும் விரிவான முதலீட்டு பாதுகாப்பு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறை மற்றும் கொள்கை வரைவு தயாரிப்பாளர்கள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குதல் என்பன இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும். இந்த ஒப்பந்தம் உலக பொருளாதார கூட்டிணைவை வலுப்படுத்தும் அதேவேளை இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகளை தேடுவதற்கான வசதிகளையும் வழங்கும்.
இருதரப்பு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி நிலைத்தன்மைக்கான முக்கியத்துவம் இதனால் வலியுறுத்தப்படுவதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இலங்கைக்குள் வர்த்தக மற்றும் வணிக வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவதுடன் வௌிப்படைத்தன்மையான மற்றும் நிலையான முதலீட்டுச் சூழலை உருவாக்கவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.
வௌிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஊக்குவிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
அதேபோல் இந்த ஒப்பந்ததம் புதிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும் அதனால் பொருளாதார முன்னேற்றத்துக்கும், புதிய வணிக வாய்ப்புக்களை உருவாக்கவும் வழிவகுக்கும்.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை வலுப்படுத்தி நிலையான முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் நிதி தொடர்புகளை மேம்படுத்தவும் வழிவகுப்பதாக இது அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM