தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்

12 Feb, 2025 | 06:22 PM
image

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில்,

தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது. 

எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது.  எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை.

தமிழக மீனவர்கள் மீதோ, தமிழக தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை. ஒரு சில மீனவர்கள் தான் டோலர் படகுகளைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றனர். அதனையே நாம் எதிர்க்கின்றோம்.

எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்யவேண்டியது தேவைப்பாடு எழாது.  எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என போராடும் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லைத்தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் எழாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:13:23
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39
news-image

அரச சேவை ஆட்சேர்ப்புக்களுக்கு நாணய நிதியம்...

2025-03-18 15:43:59
news-image

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவர்...

2025-03-18 18:21:17
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைபெ்பொருளுடன் ஒருவர் கைது...

2025-03-18 21:15:47
news-image

பேராயரின் ஆதங்கம் நியாயமானது ; உயிர்த்த...

2025-03-18 17:20:21