யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை தைப்பூச திருவிழா நடைபெற்றது.
இதன்போது நல்லூர் கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்த கோடிகளுக்கு அருள்பாலித்தார்.
நவக்கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர்.
சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இரு புறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பௌர்ணமியில் நிகழும் சிறப்பு மிக்க தினமே தைப்பூசமாகும்.
சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவானது நீர் என்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் இந்துக்களில் ஒரு சாராரின் நம்பிக்கை.
எனவே, உலக இயக்கத்துக்கு ஆதாரமாக, அவசியமாக உள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட வழிகோலிய புனிதமிகு நன்னாளாக தைப்பூச தினம் போற்றப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM