தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் மஞ்சம் வீதியுலா 

12 Feb, 2025 | 05:48 PM
image

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளானோர் வருகைதந்து மஞ்சத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

தைப்பூச தினத்தன்று காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள், விசேட பூஜை, வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை மருதனார் மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனியின் பின்னர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

பாற்குட பவனியை தொடர்ந்து, ஆலயத்துக்கு சொந்தமான சங்குவேலியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்யப்பட்டு, அதனை எருது வண்டியில் ஆலயத்துக்கு பாரம்பரிய முறைப்படி கொண்டுசென்று, ஆலய முன்றலில் நெல் குத்தி, அரிசியாக்கி, அந்த அரிசியில் பொங்கல் தயாரித்து படைக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து மாலை விசேட பூஜை, வழிபாடுகள், வசந்தமண்டப பூஜை நடைபெற்றன. 

அதற்கடுத்து, ஆறுமுகசுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

திருமஞ்சத்தில் முருகப்பெருமான் வீதியுலா வரும் வேளை வீதியில் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.

இம்முறை திருமஞ்சத்துக்கு வர்ணப் பூச்சு வேலைகளுடன் புதுப்பொலிவு பெற்று வீதியுலா நிகழ்ந்தேறியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36