பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு : தந்தை, தாய், மகன் கைது !

12 Feb, 2025 | 06:18 PM
image

பொகவந்தலவை கெர்க்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை  உடைத்து மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள், பாடசாலையில் பாவனைக்கு வைக்கப்படிருந்த எரிவாயு  சிலிண்டர் ஆகியவற்றை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த  தந்தை,  தாய், 15 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தந்தை தாய் ஆகியோரை எதிர்வரும் 14ம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறும்  15வயது மகனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்  ஒப்படைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (12) சந்தேக நபர்கள் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை  பிறப்பித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பொகவந்தலாவை பாடசாலையொன்றின்  பிரதி அதிபரின் விடுதியினை உடைத்து விடுதியில் இருந்த மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள் எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன நேற்று செவ்வாய்க்கிழமை (11)   திருடப்பட்டப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில்  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொகவந்தலாவை  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணையில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றை பொகவந்தலாவை  பொலிஸார் சோதனையிட்டனர். 

சோதனையிட்ட போதே குறித்த வீட்டில் திருடப்பட்ட மடிகணினி, தங்க ஆபரணங்கள், எரிவாயு நிரப்பும் சிலிண்டர்  என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக  பொகவந்தலாவை பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11)  கைது செய்யப்பட்டதாக  பொகவந்தலாவை பொலிஸார்  தெரிவித்தனர்.  

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27