யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - பஷீர் சேகுதாவூத்

Published By: Digital Desk 7

12 Feb, 2025 | 06:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு சிறிய கட்சி பிரதான இரண்டு கட்சிகளையும் தோற்கடித்துவிட்டு ஆட்சிக்கு வருவதற்கு காரணம், பிரதான கட்சிகளின் மீது மக்களின் விரக்தியாகும். பாராளுமன்ற தேர்திலில் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை வெற்றிகொண்டிருப்பது பாரிய விடயமாகும். பழைய அரசியல் கலாசாரம் அங்கு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் சிரேஷ்ட தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தேசிய மாநாடு புதன்கிழமை (12) மருதானை குப்பியாவத்தை சனசமூக பண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுதந்திரத்துக்கு பின்னர் எமது நாட்டை பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்து வந்தன. இதில் சுறுபான்மை கட்சிகளாக தமிழ் கட்சிகள் மொழியை முன்வைத்தும் முஸ்லிம் கட்சிகள் மார்க்கத்தை சொல்லியும் அரசியல் செய்து வந்தன. ஆனால் இந்த அனைத்தையும் பின்தள்ளிவிட்டு கடவுளே இல்லாத ஒரு கட்சி அனைத்தையும் துடைத்தெரிந்துவிட்டு 159 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.

ஒரு சிறிய கட்சி பிரதான இரண்டு கட்சிகளையும் தோற்கடித்துவிட்டு ஆட்சிக்கு வருவதற்கு காரணம், பிரதான கட்சிகளின் மீது மக்களின் விரக்தியாகும். பாராளுமன்ற தேர்திலில் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை வெற்றிகொண்டிருப்பது பாரிய விடயமாகும்.

பழைய அரசியல் கலாசாரம் அங்கு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் தற்போதைய அரசாங்கத்தின் நிலைமையயை இன்னும் இரண்டு மாதங்கள் செல்லும்போது தெரிந்துகொள்ள முடியுமாகும்.

ஏனெனில் நாங்கள் வாக்களித்து அரசாங்கததை தெரிவுசெய்தாலும் அரசாங்கத்தை வழிடத்துவது இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற சர்வதேச நாடுகளாகும். எமது நாடு அமைந்திருப்பது முக்கியமானதொரு கேந்திர முக்கியத்துவமான இடத்திலாகும். குறிப்பாக திருகோணமலை துறைமுகம் இயற்கை துறைமுகமாகும்.

எந்தப்பெரிய கப்பலை வேண்டுமானாலும் அங்கு கொண்டுசெல்லலாம். அதனால் அந்நைாடுகளின் பாதுகாப்பு கருதி இந்த துறைமுகத்தை கைப்பெற்றிக்கொள்ள இந்த நாடுகளிடத்தில் போட்டித்தன்மை இருந்து வருகிறது.

மேலும் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற கட்சியாக அது இருந்து வந்தது. ஆனால் தற்போது அது உருவாக்கப்பட்ட நோக்கம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதனாலே தற்போது கொழும்பையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து ஐக்கிய சமாதான கூட்டணி கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களை இலக்காகக்கொண்டே நாங்கள் செயற்பட வேண்டும்.

அத்துடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவமும் முஸ்லிம் சமூகத்தை உலகளாவிய ரீதியில் வெறுப்படையச் செய்ய திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். குண்டுகளை வெடிக்க வைத்தவர்களுக்கு குண்டு தொடர்பில் எந்த அறிவும் இல்லை என்பது அவர்களின் செயற்பாடுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட ஒரு சிலர் செய்த இந்த தவறை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பழி சுமத்தப்பட்டது.

ஜனநாயக நாடான லண்டன் நகரிலும் முஸ்லிம்களின் கடைகள் தேடித் தேடி தாக்கப்பட்டன. அந்தளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பை தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் உலக அரசியல் தொடர்பில் நாங்கள் நன்கு புரிந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25