இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் சட்டத்தரணியாக நடித்திருக்கும் ' கூரன் ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கத்தில் உருவாகி உள்ள ' கூரன் ' எனும் திரைப்படத்தில் எஸ். ஏ. சந்திரசேகர், வை. ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியம், இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் ஜான்சி எனும் நாயும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறது. மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
விலங்குகளின் உரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்கி தயாரித்திருக்கிறார். .
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இந்த தருணத்தில் இந்த திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் தோன்றி உரையாடும் பிரத்யேக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM