இந்திய வானவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை தழுவி 'ரொக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் 'எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து இந்தியா முழுவதிலும் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் மாதவன்- தற்போது தமிழ்நாட்டு விஞ்ஞானியான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் படத்தில் ஜி.டி . நாயுடுவாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரை கலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன்- விஜய் மூலன்- ஆர் . மாதவன்- திருமதி சரிதா மாதவன் - ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் பிறந்த மண்ணான கோயம்புத்தூரில் இம்மாதம் தொடங்கும் என்றும், எதிர்வரும் 18 ஆம் திகதியன்று இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்றும், அந்த தருணத்தில் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் மாதவன் ஜி டி நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்து இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM