நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும் 'சுப்ரமணி'

12 Feb, 2025 | 05:05 PM
image

நடிகர் அஜித் குமாரின் உறவினரும், 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ரிச்சர்ட் ரிஷி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு 'சுப்ரமணி' என பெயரிடப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளரான ராகுல் பரஹம்சா இயக்கத்தில் உருவாகி வரும் 'சுப்ரமணி' எனும் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் 'பெல்ஜியன் மாலினோயிஸ் 'எனும் வகையைச் சார்ந்த நாய் ஒன்றும் நடிக்கிறது. 

பிரபல இயக்குநர் வின்சென்ட் செல்வா கதை- திரைக்கதை -வசனம்- எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்து வருகிறார் .

எக்சன் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சௌந்தர்யா தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. விரைவில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வின்சென்ட் செல்வா - ராகுல் பரஹம்சா- ரிச்சர்ட் ரிஷி - கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படம்.... பார்வையாளர்கள் மற்றும் திரையுலக வணிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46