பிரைம் வீடியோவில் வெளியாகும் கதிர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ' சுழல் - 2 ' இணைய தொடர்

12 Feb, 2025 | 04:22 PM
image

பிரைம் வீடியோவில் கதிர்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'சுழல் - தி வோர்டெக்ஸ் ' எனும் கிரைம் திரில்லர் ஜேனரிலான இணையத் தொடரின் இரண்டாம் பாகம் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர்கள் பிரம்மா மற்றும் கே. எம். சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சுழல் 2 ' எனும் இந்த இணைய தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்சி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர் , அஸ்வினி நம்பியார், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இந்த இணையத் தொடரை நட்சத்திர இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி எழுதி, அவர்களுடைய வால்வாட்சர் பிலிம்ஸ்  நிறுவனத்தின் சார்பில் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்திற்காக தயாரித்திருக்கிறார்கள்.

இந்த இணைய தொடர் குறித்து குழுவினர் பேசுகையில், '' தமிழகத்தில் காளி பட்டினம் எனும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்ட காளி திருநாள் கொண்டாட்டங்களில் பின்னணியில் இதன் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சுழல் இணைய தொடரின் முதல் சீசனின் இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் காத்திருக்கும் காட்சி இடம் பிடித்திருக்கும். அதனை தொடர்ந்து இந்த இரண்டாம் சீசனின் கதை தொடங்குகிறது.

இணைய தொடரின் மற்றொரு நாயகனான கதிர் மர்மங்களால் சூழப்பட்ட வரலாற்றுக் கொண்ட கிராமத்தை சென்றடைகிறார். அங்கு நிகழும் ஒரு கொலையால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை தான் இந்த 'சூழல் 2 'இணைய தொடரின் திரைக்கதையாகும். இந்த இணைய தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக தமிழில் ஒளிபரப்பாகிறது.

மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும், ஆங்கில மொழியிலும் சப் டைட்டிலுடன் ஒளிபரப்பாகிறது'' என்றார்.

இதனிடையே 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் முதல் பாகம் உலகம் முழுவதிலும் உள்ள டிஜிட்டல் தள பார்வையாளர்களிடம் பாரிய வெற்றியை பெற்றது போல் இந்த இணையத் தொடரின் இரண்டாம் பாகமும் வெற்றியை பெறும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46