செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்பேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.
பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு ஜனாதிகதி மேக்ரானுடன் இந்திய பிரதமர் மோடி ஒன்றாக பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையை இன்று புதன்கிழமை (12) சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய சுந்தர் பிச்சை, பாரீஸ் நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தபோது, அதன் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு வர கூடிய வியக்கத்தக்க வாய்ப்புகளை பற்றியும் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்காக நாம் நெருங்கி பணியாற்றுவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM