தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் முன்னோட்டம்

12 Feb, 2025 | 03:59 PM
image

தேசிய விருது பெற்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகர் அப்பு குட்டி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் - லிங்குசாமி - சீனு ராமசாமி-  கௌதம் வாசுதேவ் மேனன்-  சுசீந்திரன்-  நட்டி என்கிற நட்ராஜ் - பிரேம்ஜி-  உள்ளிட்ட பலர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜு சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் ' எனும் திரைப்படத்தில் அப்பு குட்டி , ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், ரோஜி மேத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, லீலாவதி கருணாகரன், விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜு சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி- நவ்னீத் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  

மண் மணம் கமழும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் மற்றும் மாதன்ஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோஜி மேத்யூ மற்றும் ராஜூ சந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான எளிய கிராமத்து மனிதரின் வாழ்வியல் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும், அவை சுவாரசியமாக படமாக்கப்பட்டிருப்பதாலும் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46