வளி மாசடைவு கர்ப்பிணித் தாய்மார்களின் கருவில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேராசிரியரும் சுவாச ஆரோக்கியம் வைத்தியர் நிபுணருமான துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
மாசடைந்த வளியை சுவாசிப்பதால் கருவில் உள்ள சிசுவின் எடை குறைவதற்கு வழிவகுப்பதோடு, பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளது.
சுவாச ஆரோக்கியத்தில் வளி மாசடைவின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது
வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு (OPDs) வருகை தரும் நோயாளிகளில் 40 சதவீதமானவர்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் யசரத்ன குறிப்பிட்டார்.
சுவாசிப்பதில் சிரமம், தடிமல் மற்றும் வைரஸ் தொற்று நிமோனியா போன்ற கடுமையான நிலைகள் வரை இருக்கும்.
நீண்ட கால சுகாதார பாதிப்புக்களை தடுக்க வளி மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM