யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது.
காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
“பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு”, “சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று”, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதைய தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது நேற்றைய தினம் (11) ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினமும் தொடர்கிறது.
குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கடந்த 31.01.2025 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விகாரை தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தபோது, அந்த விகாரை அமைந்துள்ள காணிக்கு பதிலாக மாற்றுக்காணிகளை பெறுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனாவும் தெரிவித்திருந்தனர்.
இந்த கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த விகாரைக்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
அதன் அடுத்தகட்ட முயற்சியாக இப்போராட்டமானது பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், சமூகமட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM