அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும், இரவில் குளிராகவும் இருக்கும்

Published By: Digital Desk 3

12 Feb, 2025 | 02:21 PM
image

நாளை வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும். 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழை எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நீடிக்கும்.

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் வீசுவதுடன் மணிக்கு 35 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12