சியெட் இலங்கையில் 10வது முதற்தர S-I-S விற்பனை நிலையத்துடன் 2025 இனை ஆரம்பிக்கிறது

Published By: Digital Desk 7

12 Feb, 2025 | 04:03 PM
image

இலங்கையில் டயர் உற்பத்தியில் முன்னணி ஸ்தானத்தை வகிக்கும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது பிரதான நகரங்களில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தனது செயற்பாடுகளின் உச்சத்தை அடைவதற்காக மூன்று முதற்தர ஷொப்-இன்-ஷொப் (SIS) சில்லறை விற்பனை நிலையங்களை திறந்து வைத்தது.

இலங்கையில் தனது 8வது, 9வது மற்றும் 10வது சியெட் SIS விற்பனை நிலையங்களை கொழும்பு 7, கொழும்பு - கண்டி வீதியில் மிரிஸ்வத்தை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் திறந்து வைத்த சியெட் நிறுவனமானது இதன் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு இந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமான இடங்களில் பிரத்தியேக மற்றும் முதற்தர கொள்முதல் அனுபவத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த மூன்று புதிய சியெட் SIS விற்பனை நிலையங்கள் 515, புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பு இல் உள்ள செரண்டிப் டயர் அண்ட் பேட்டரி சிட்டி (Serendib Tyre and Battery City), 163/4,  கண்டி வீதி, முடுங்கொட, மிரிஸ்வதையில் அமைந்துள்ள அஜித் டயர் சேர்விஸ் [Ajith Tyre Service மற்றும் 174, கின்ஸி வீதி, கொழும்பு 7 இல்  அமைந்துள்ள யுனிவர்சல் டயர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், (Universal Tyres (Pvt) Ltd.) என்பனவாகும்.

இந்த புதிய விற்பனை நிலையங்கள் கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள், டயர் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் கூடிய பரந்த அளவிலான சியெட் டயர்களை வழங்குகின்றன. அத்துடன் வீல் சமநிலை மற்றும் சீரமைப்பு, டயர் வீக்கத்திற்கான நைட்ரஜன் மற்றும் காற்று பம்புகள், அலாய் வீல்கள் மற்றும் ஆட்டோமொபைல் பேட்டரிகள் போன்ற பல சேவைகளை வழங்குகின்றன.

இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் டயர் வர்த்தக நாமத்தின் விநியோக ஊடக  விரிவாக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சியெட் ஷொப் -இன் -ஷொப் எண்ணக்கருவில் அமைந்த விற்பனை நிலையங்கள், வர்த்தக நாமத்தை முதற்தரமாக்குதல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், மேலும் தற்போதுள்ள பன்முக வர்த்தக நாம விற்பனை நிலையப்பகுதிகளில் சியெட் வர்த்தகநாம டயர்களுக்கான பிரத்தியேக பகுதியை வரையறுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சியெட் களனி நிறுவனமானது வாடிக்கையாளர்களின் நலன் கருதி  அவர்கள் அதிக வசதியாக உணரும் வகையில் இந்த தனிப்பட்ட இடத்தின் உட்புறம், வாடிக்கையாளர் காத்திருப்பிடம்  மற்றும் வரவேற்பு பகுதி ஆகியவற்றை நவீனமாக வடிவமைத்துள்ளது.

மேலதிகமாக, நிறுவனமானது வர்த்தக நாமத்தை மேம்படுத்தும் வகையில் விற்பனை நிலையத்திற்குள்ளும் வெளியேயும் வர்த்தகநாமப் பலகைகளின் நவீன வடிவமைத்தல், கூரை மெருகூட்டல், மின்குமிழ்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றின் நேர்த்தி போன்றவற்றில் முதலிட்டுள்ளது.

அத்துடன் டயர் பங்காளர்களுக்கு  கிடைக்கும் டயர் சலுகைகளை வலியுறுத்தும் வகையில் புதுமையான தயாரிப்பு தொகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த புத்தாக்கமான செயற்பாடானது வர்த்தகநாமத்தின் தெரிவுநிலை மற்றும் நிலைப்படுத்தலை மேம்படுத்துவதுடன், டயர் பங்குதாரர்களின் வருமானத்தையும்  அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திகளில் சுமார் 20 வீதத்தை உலகின் 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணிகளை சேகரிக்கும் விடயத்திலும், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான சார்பு நிலையிலிருந்து விடுவிற்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right