இலங்கையின் முன்னணி நிறப்பூச்சு தயாரிப்பாளரான, ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது, அங்கொடை தேசிய மனநல நிறுவகத்தின் உளவியல் அலகில் நிலைமாறு வர்ணப்பூச்சு செயற்றிட்டத்தினை முன்னெடுத்தமையினால் சமுதாய நலனிலான தனது அர்ப்பணிப்பினை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
“பெஹபெர திவி” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கம்பெனியின் சமுதாய சமூக பொறுப்பு முயற்சிகளின் பகுதியொன்றாக, இத்தொடக்கமானது பாடசாலைகள், கலாச்சார நினைவுச்சின்னங்ள், மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட, நாடளாவிய ரீதியிலான பொது இடங்களிற்கு புத்துயிரளிப்பதற்கான ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்திக்காட்டுகின்றது.
உணர்வுகள், நடத்தைகள் மற்றும் உளவியல் பெறுபேறுகளை செல்வாக்கிற்குட்படுத்துவதில் வண்ணங்களின் இயலுமையானது நன்கறியப்பட்டுள்ளதுடன், அமைதியானதும், பாதுகாப்பானதும் மற்றும் குணப்படுத்தக்கூகூடியதுமான சூழலொன்றினை உருவாக்குவதில் ஒரு பெறுமதிமிக்க கருவியாகவும் காணப்படுகின்றது.
குறிப்பாக வயதான மனநல நோயாளிகளுக்கு, மனவழுத்தத்தை குறைத்தல், ஓய்வை வளர்த்தல், மற்றும் பாதுகாப்புணர்வு மற்றும் சௌகரியமான உணர்வை மேம்படுத்தல் போன்றவற்றில் சிகிச்சை வெளிகளில் வண்ணங்களின் பயன்பாடானது அளப்பரிய நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கின்றது.
கவனமாக தேர்வுசெய்யப்பட்ட வண்ணங்களானவை அறிகை செயற்பாடு, உணர்ச்சிகர ஈடுபாடு மற்றும் நித்திரையின் தரம் என்பவற்றை வளப்படுத்துவதுடன் சிகிச்சை மற்றும் ஓய்வு செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்கின்றன.
தேசிய மனநல நிறுவகத்தின் வயதானவர்களுக்கான உளவள ஆலோசகரான வைத்தியர். மதுஷானி டயஸ் அவர்கள், “முதியோர் மனநலம், அல்லது வயதானவர்களுக்கான மனநல மருத்தவமானது, சிகிச்சை பெறுபேறுகளை வளப்படுத்துவதற்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட சிகிச்சைமைய சூழலைத் தேவைப்படுத்துகின்றது.
வண்ணங்களிற்கும் மன/உணர்வு நிலைகளுக்குமான நேரடித் தொடர்பினை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்குகையில், சரியான மனநிலை மற்றும் சுற்றாடலை உருவாக்குவதற்காக குறிப்பிட்ட இடங்களிற்காக வேறுபட்ட வண்ணங்களது பயன்பாட்டினை நாம் வலியுறுத்துகின்றோம்.
இச்செயற்றிட்டத்துக்காக, நோயாளர்கள் தாங்கள் வைத்தியசாலையில் இருக்கின்றோம் என்பதனை மறக்கச்செய்யுமாறு தெரிவுசெய்யப்பட்ட வண்ணங்களானவை சௌகரியமானதும், இல்ல உணர்வினை தாபிக்கக்கூடியதுமாகவிருப்பதனை உறுதிப்படுத்தி, அதே கோட்பாட்டினை நாம் பயன்படுத்தியுள்ளோம்” எனக்குறிப்பிட்டு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
“வண்ணங்கள் எம் வாழ்வில் அபரிதமான தாக்கங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன” என ஏசியன் பெயின்ட்ஸ் கோஷ்வேயின் சந்தைப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல் தலைவர் அனுராதா எதிரிசிங்க குறிப்பிடுகின்றார். “முதியோர் மனவள அலகிலான பெஹபர திவி செயற்றிட்டமானது அர்த்தமிகு வேறுபாட்டினை உருவாக்குவதற்கு வண்ணங்கள் குறித்த எமது நிபுணத்துவத்தினை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதனைப் பயன்படுத்தி சமுதாயத்திற்கான எமது அர்ப்பணிப்புக்கு உதாரணமாக விளங்குகின்றது.
வைத்தியசாலையில் சிரேஷ்ட நோயாளர்களுக்கு மிகவும் நேர்கணியமானதும் சிகிச்சை தன்மைமிக்கதுமான சூழழை எமது முயற்சிகள் உருவாக்கியுள்ளன என்பதையிட்டு நாம் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றோம்”.
“பெஹபர திவி” நிகழ்ச்சித்திட்டமானது பொதுமக்களின் உண்மையான தேவைகளை நிவர்த்திப்பதில் தனது கைத்தொழில் துறை நிபுணத்துவத்தினை உயர்த்துவதில் ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் பரந்த நோக்கத்தினை பிரதிபலிக்கின்றது. முக்கியமான பொது இடங்களை மீளுயிர்ப்பிப்பதன் மூலமாக, கம்பெனியானது உணர்வுகளை மேலெழுப்பவும் பன்மைத்துவ சமூகங்களிடையே உணர்வுகளை மேலெழுப்பவும் நல்வாழ்வை பேணவும் நோக்கங்கொண்டுள்ளது.
“பெஹபர திவ” மற்றும் ஏனைய பெருநிறுவன சமுதாய பொறுப்பு தொடக்கங்களின் ஊடாக, ஏசியன் பெயின்ட் கோஸ்வேயானது தன்னுடைய பெருநிறுவன பொறுப்புக்கான ஆழமான அரப்பணிப்பினை நிறைவுசெய்கின்றது.
கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக கல்வியை ஊக்குவித்தல் மற்றும் சுகாதார பராமரிப்பு வசதிகளை வளப்படுத்தல் என்பவற்றிலிருந்து, கம்பெனியின் முயற்சிகளானவை இலங்கையில் நீடித்ததும் நேர்க்கணியமானதுமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அங்கொடை தேசிய மனநல நிறுவகத்தின் முதியோர் உளநல அலகிலான இச்செயற்றிட்டமானது வாழ்வினை மேம்படுத்துவதில் சிந்தனாபூர்வமான பெருநிறுவன பங்களிப்பின் நிலைமாறு வலுவிற்கு ஒரு சான்றாக விளங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM