(நெவில் அன்தனி)
இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது முழங்கை 15 பாகை அளவுக்கு மடிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேல் மடிந்தால் அது விதிகளை மீறியதாக கருதப்படும்.
தொழில்சார் கிரிக்கெட்டில் குனேமான் 2017இல் ஈடுபட ஆரம்பித்த பின்னர் அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பந்துவீச்சு பாணி விதிகளுக்கு உட்பட்டதென உறுதிபடுத்தப்படும்வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் அவரது பந்துவீச்சு பாணி விதிமீறியதென உறுதிப்படுத்தப்பட்டால் அவரது பந்துவீச்சு பாணி திருத்தப்பட்டு விதிக்குட்பட்டது என உறுதிப்படுத்தப்படும் வரை அவருக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM