பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (11) திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. வாஸீத் அஹமட் மற்றும் உணவு ,மருந்து பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ஆகியோரால் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தமது கடமையும், பொறுப்பும் ஆகும் என்ற அடிப்படையில் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களூடாக அறியத்தருமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM