கடுவலையில் பாடசாலை மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் ; 11 பேர் வைத்தியசாலையில்

12 Feb, 2025 | 11:00 AM
image

கடுவலை பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், தேசிய மாணவர் படை பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11 மாணவ, மாணவிகளை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவ, மாணவிகள் நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் இது தொடர்பில் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22