வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

12 Feb, 2025 | 10:15 AM
image

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு வேறு திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கடந்த மாதம் வீடு ஒன்றில் இருந்து கைதொலைபேசி ஒன்றும் பிறிதொரு வீட்டில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம்  குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. 

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக  மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35