'விகாரையை இடிக்க வாரீர்' என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இதன் பின்னர் - 'விகாரையை இடிக்க வாரீர்' என்று நான் அழைப்பு விடுத்தது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்விடயத்தை அறிந்த உடனேயே எனது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக, குறித்த செய்தி போலியானது என பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
குறித்த விடயத்தை மறுத்து எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14 ம் திகதிக்கு அழைப்புக்கட்டளை எனக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM