லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சிறுவன் உயிரிழப்பு - தீர்ப்பை வெளியிட நீதிமன்றம் திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 7

12 Feb, 2025 | 09:17 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவனின் மரணம் குற்றமொன்றின் பிரதிபலனா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (11)  அறிவித்தது.

இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த விவகாரத்தில் சத்திர சிகிச்சையோடு தொடர்புடைய வைத்தியர் அவுஸ்ரேலியாவில் இருந்து வழங்கிய வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் ஏனைய சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள், சாட்சிகள் பெறப்பட்ட நிலையில் சிறுவனின் மரணம் கொலையா அல்லது குற்றமொன்றின் எதிரொலியா அல்லது வேறு காரணத்தால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணையின் தீர்ப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  அறிவிப்பதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இந்த வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையை சேர்ந்த 3 வயது சிறுவன் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின் கடந்த 2023 ஜூலை 28 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

சத்திரசிகிச்சையின் பின்னரான தொற்று பரவல் மரணத்துக்கு காரணம் என லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் அப்போது குறிப்பிட்ட நிலையில் பாரிய மருத்துவ தவறொன்று அல்லது மனித உறுப்பு வர்த்தக நடவடிக்கை ஒன்று சிறுவனின் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம் என சிறுவனின் குடும்பத்தார் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12