உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை குறிக்கோளாகக் கொண்டு ஒருநாள் போட்டிகளை எதிர்கொள்வோம் - சரித் அசலன்க

Published By: Vishnu

11 Feb, 2025 | 07:22 PM
image

(நெவில் அன்தனி)

இன்னும் இரண்டு வருடங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியை கட்டியெழுப்பு குறிக்கோளுடன் அடுத்து வரும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை எதிர்கொள்ளவுள்ளதாக இலங்கை எதிர்கொள்ளும் என ஊடகவியலாளர்களிடம் அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சரித் அசலன்க இதனைக் குறிப்பிட்டார்.

'2027இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியை இலக்கு வைத்தே அடுத்தவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை எதிர்கொள்ளவுள்ளோம். எமது அணிக்குள் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புவது மிக முக்கியம். நாங்கள் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்து அக்கறை செலுத்தவேண்டும்.

'சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது இலங்கை வீரர்களுக்கும் அதேபோல் இரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நடந்ததை மறந்துவிட்டு எதிர்காலம் குறித்து கூடுதல் அக்கறை செலுத்தி திறமையாக விளையாடவேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடுவது அணிக்கு முக்கியம் வாய்ந்ததாகும். அவுஸ்திரேலியா சவால்மிக்க அணியாகும். அந்த சவாலை முறியடிக்க சகலதுறைகளிலும் திறமையுடன் கடுமையாக விளையாடவேண்டும்' என சரித் அசலன்க மேலும் தெரிவித்தார்.

நாளைய போட்டிக்கான இறுதி அணி எவ்வாறு அமையும் எனவும் நீண்டகாலத்திற்குப் பின்னர் பகல்பொழுதில் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுவது சவால் மிக்கதா எனவும் சரித் அசலன்கவிடம் கேட்டபோது,

'நாங்கள் இன்னும் அணியைத் தீர்மானிக்கவில்லை. போட்டிக்கு முன்னர் காலையில் ஆடுகளத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்த பின்னர் இறுதி அணியைத் தீர்மானிப்போம். பெரும்பாலும் மூன்று  சுழ்பந்துவீச்சாளர்களுடனும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் இப் போட்டியை எதிர்கொள்ள எண்ணியுள்ளோம். பகல்பொழுதில் ஒருநாள் போட்டியில் விளையாடுவது சவால்மிக்கதுதான். ஆனால் அது மிகப் பெரிய சவால் அல்ல. கடும் உஷ்ணம்தான் சிரமத்தைக் கொடுக்கும்' என பதிலளித்தார்.

இலங்கை குழாத்தில் இடம்பெறும் மொஹமத் ஷிராஸுக்கு இறுதி அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என கேட்டபோது,

'இலங்கை அணியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டுவருகிறது. மேலும்  அவருக்கு  ஓரிரு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவற்றில் அவர் சிறப்பாக பந்துவீசிய போதிலும் அவருக்கு இன்னும் அனுபவம் தெவைப்படுகிறது. காலப்போக்கில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் அவர் சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுப்பார்' என்றார்; சரித் அசலன்க.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளும் தங்களுக்கு மிக முக்கியமானது என ஊடகங்களிடம் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்தார்.

'சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கு எங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ள இந்தத் தொடர் முக்கிய பங்குவகிக்கும். மேலும் பிக் பாஷ் கிரிக்கெட்டில் பிரகாசித்த சிலர்   அணியில் இடம்பெறுகின்றனர். அவர்களுக்கு இந்தத் தொடர் சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும். இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நாங்கள் துபாயில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டோம். அது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த பலனைத் தந்தது. அதேபோன்று இங்கு விளையாடப்படும்; இந்த இரண்டு போட்டிகளும் எமது ஆற்றல்களை மேலும் அதிகரித்துக்கொள்ள உதவும். எவ்வாறாயினும் பகல் பொழுதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது வித்தியாசமானது. ஆனால், எங்களால் சமாளிக்க முடியும்.' என ஸ்மித் மேலும் குறிப்பிட்டார்.

அணிகள் (பெரும்பாலும்)

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே அல்லது ஜெவ்றி வெண்டசே, அசித்த பெர்னான்டோ, ஏஷான் மாலிங்க அல்லது லஹிரு குமார.

அவுஸ்திரேலியா: மெட் ஷோர்ட், ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), ஜொஷ் இங்லிஸ், மானுஷ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், கூப்பர் கொனலி, நேதன் எலிஸ், அடம் ஸம்ப்பா, தன்வீர் சங்கா, மிச்செல் ஸ்டார்க்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 11:05:52
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45