(நா.தனுஜா)
இலங்கையின் விவசாயத்துறை முகங்கொடுத்துவரும் அவசர சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு அரசாங்கம், தனியார்துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைப்பதுடன், சவால்களைக் களைவதற்கான வழிவகைகளைக் கண்டறியும் நோக்கில் 'வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விவசாயத்துக்கான கூட்டுத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் விவசாயத்துறை முகங்கொடுத்துவரும் அவசர சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு அரசாங்கம், தனியார்துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் சுற்றாடல் அமைச்சும், ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த அரச - தனியார் மக்கள் மன்றம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது
இதன்போது வானிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடியவாறான விவசாய நடவடிக்கைகளில் தனியார் துறையினர் ஈடுபடுவதில் காணப்படும் தடைகளை உரியவாறு கையாள்வது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கொள்கை, நடைமுறை மற்றும் நிதி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் புத்தாக்கங்களுடன் இணைந்ததாக மீளெழுச்சித்தன்மையை மேம்படுத்தல் என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலின்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.டி.எஸ்.ஜயதுங்க, 'தற்காலத்தில் நிலவும் மிகமுக்கிய சவால்களில் ஒன்றைக் கையாள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படக்கூடிய கூட்டு நடவடிக்கையாக இது அமைந்திருக்கின்றது. அரச, தனியார் மற்றும் சமூகத்துறைகளின் நிபுணத்துவம் மற்றும் வளங்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக விவசாயத்தை வலுப்படுத்தவும், பெரும் எண்ணிக்கையான இலங்கையர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், புத்தாக்க சிந்தனையுடன்கூடிய தீர்வுகளை வழங்கவும் முடியும்' என நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை இலங்கையின் விவசாயத்துறை முக்கிய திருப்புமுனையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதிநிதி நளின் முனசிங்க, 'இவ்வாறான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட கூட்டு முயற்சிகளின் ஊடாக வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கான உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நிலையானதும் காலநிலை மீள்தன்மை கொண்டதுமான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடியும்' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டத்தின் கீழ் தனியார்துறை முதலீட்டைக் கட்டுப்படுத்தும் தடைகளைக் களைதல், அரச, தனியார் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேம்படுத்தல், சர்வதேச காலநிலை நிதியுதவியைப் பயன்படுத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாய முயற்சிகளைக் கட்டியெழுப்புவதற்கும், சிறந்த அமுலாக்க நடைமுறைகளை மதிப்பீடு செய்வதற்குமான கட்டமைப்புக்களை உருவாக்குதல் என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM