MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன் யாழ்ப்பாணத்துக்கு விஸ்தரிக்கப்பட்டது

11 Feb, 2025 | 05:50 PM
image

MMBL மணி ட்ரான்ஸ்பர் (பிறைவேட்) லிமிட்டட் அதன் புதிய கிளை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளதைப் பெருமையுடன் அறிவிக்கிறது. கூடுதலான வசதி, இலகுவான அணுகல் மற்றும் நம்பகத்தன்மையுடன் வட மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற நிறுவனத்தின் குறிக்கோளில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 

இலங்கையின் அதி நம்பிக்கையான உள்வரும் பண அனுப்பீட்டுச் சேவை வழங்குநராக விளங்கும் MMBL மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் தடையற்ற மற்றும் இலகுவான பணப் பரிமாற்றங்களுக்கு இடமளிப்பதன் மூலம் தனது மதிப்புக்குரிய யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரமான நிதித் தீர்வுகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது.

நகரின் மத்தியில் இல.10ஏ, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியைக் கொண்ட கேந்திரமான இடத்தில் புதிய கிளை அமைந்திருப்பதால். வெளிநாட்டிலுள்ள தமது அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் எவரும் இக்கிளையை இலகுவாக அணுகிச் சேவைகளைப் பெறலாம். பயணத் தூரங்களைக் குறைப்பதிலும் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் அத்தியாவசிய நிதிச் சேவைகளை உங்களுக்கு அருகில் கொண்டுவருவதிலும் காட்டப்படும் அக்கறைக்கு இந்த விரிவாக்கம் ஒரு தெளிவான சான்றாகும்.

MMBLஇலிலுள்ள நாம் விரைவான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பணப் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எமது கிளை பின்வருவன உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குகிறது:

• வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம், ரியா மற்றும் முதூட் ஃபின்சேர்வ் (Muthoot Finserve) ஊடாக உடனுக்குடனான பணப் பரிமாற்றங்கள்.

• மேம்படுத்தப்பட்ட வசதிக்காக பணத்தில் அல்லது நேரடி வங்கிப் பரிமாற்றங்களில் வெளிச்செல்லும் பண அனுப்பீடுகள்.

• பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களை உறுதிசெய்யும் வகையில் விரைவான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான கொடுக்கல் வாங்கல்கள்.

• வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்கும் பொருட்டு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் உட்பட வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கும்.

MMBL மணி ட்ரான்ஸ்பர் (பிறைவேட்) லிமிட்டட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சமிந்த ஹிந்துரங்கல கருத்து வெளியிடுகையில், வளமான வரலாறு மற்றும் உயிர்த்துடிப்பான சமூகத்தையும் வலுவான உலகளாவிய தொடர்புகளையும் கொண்ட யாழ்ப்பாணத்தில் எமது பிரசன்னத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். வட மாகாணத்திலுள்ள எமது  வாடிக்கையாளர்களுக்கான அணுகல் வசதியை மேம்படுத்தும் அதே சமயத்தில், செயல்திறன் வாய்ந்த மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நட்புறவான பண அனுப்பீட்டுச் சேவை அனுபவத்தை வழங்குவதில் நாம் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை புதிய கிளை பிரதிபலிக்கின்றது” என்று கூறினார்.

ஏதேனும் விசாரணைகளுக்கு இல.10ஏ, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கு விஜயம் செய்யும்படி அல்லது 021-2121021 என்ற யாழ்ப்பாணம் ஹொட்லைன் ஊடாகத் தொடர்புகொள்ளும்படி யாழ்ப்பாணத்திலுள்ள மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு MMBL அழைப்பு விடுக்கின்றது. உங்கள் அன்புக்குரியவர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தைப் பெறுவதாக இருந்தாலும் வியாபாரத்தின் பேரில் சர்வதேச கொடுப்பனவுகளைப் பெறுவதாக இருந்தாலும் வருடத்தின் சகல நாட்களிலும் உங்களுக்குச் சேவையாற்ற MMBL ஆயத்தமாக இருக்கின்றது.

MMBL மணி ட்ரான்ஸ்பர் – பண அனுப்பீட்டுச் சேவைகளுக்கு உங்கள் நம்பிக்கையான பங்காளி. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right