தாயிற்கும், மகளுக்கும் இடையேயான சிக்கலான உறவு குறித்த படமாக தயாராகி இருக்கும் 'காதல் என்பது பொதுவுடமை' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சசி- பாலாஜி தரணிதரன், நடிகர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி காதலர் தினத்தன்று வெளியாகும் 'காதல் என்பது பொதுவுடமை' எனும் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரோகிணி, வினீத், கலெஸ் , அனுஷா, தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தன் பாலின காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஜோமன் ஜேக்கப், நிதியா அற்புத ராஜா, டிஜோ அகஸ்டின், விஷ்ணு ராஜன், சச்சின் எஸ். ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி தனஞ்ஜெயன் வழங்குகிறார்.
எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கு பற்றி நடிகை ரோகிணி பேசுகையில், '' தன் பாலின காதலைப் பற்றிய படைப்பு இது. மேலும் இது தொடர்பான உரையாடல் எங்கு நிகழ வேண்டும் என யோசித்து, குடும்பப் பின்னணியில் இப்படத்தின் கதையை இயக்குநர் எழுதியிருக்கிறார். இது தாயிற்கும், மகளுக்கும் இடையேயான படமும் கூட. இந்தப் படத்தில் லட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். சரியாக நடித்திருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. இந்தப் படம் பேசும் உறவு ரீதியான அரசியலை விட.. இந்த படைப்பு ரசிகர்களை வெகுவாக கவரும். இதுபோன்று சமூகத்தில் பேசத் தயங்கும் விடயங்களை படைப்பாக உருவாக்குவது தான் கலையின் பணி. இதனை நாங்கள் ஒன்றிணைந்து பொறுப்புடன் செய்திருப்பதாக நம்புகிறோம்.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM