சாதனை படைத்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முன்னோட்டம்

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 05:30 PM
image

இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டிராகன் எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிராகன்' எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். பட்டதாரி இளைஞரின் கல்லூரி வாழ்க்கையையும், கல்லூரிக்குப் பிந்தைய வாழ்க்கையையும் உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் -கல்பாத்தி எஸ். கணேஷ் - கல்பாத்தி எஸ். சுரேஷ்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் முன்னோட்டம் வெளியானதை தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநர் - நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிராகன் ' படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகளில் இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் ரசனையுடன் இடம் பிடித்திருக்கிறது. இதனால் பிரதீப் ரங்கநாதன் - அனுபமா பரமேஸ்வரன் - கௌதம் வாசுதேவ் மேனன் - மிஷ்கின் - கே எஸ் ரவிக்குமார் - சினேகா-  உள்ளிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களையும், ஏனைய திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46