பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகளின் தோல்வியே மின்விநியோக துண்டிப்புக்கு காரணம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

Published By: Digital Desk 7

11 Feb, 2025 | 05:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது.இந்த உண்மையை மறைப்பதற்காகவே அரசாங்கம் குரங்கை குற்றஞ்சாட்டுகிறது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மின்விநியோக துண்டிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பு முகாமைத்துவம் அல்லது முறைமை கட்டுப்பாடு குரங்கு மோதி செயலிழக்கும் என்று குறிப்பிடுவது நகைச்சுவையானது. குரங்கினால் தேங்காய் விலையேற்றம், நாய், பூனைகளுக்கு உணவளிப்பதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டவர்கள். மின்விநியோக தட்டுப்பாட்டுக்கு குரங்கு மீது பழிசுமத்துவது ஆச்சரியத்துக்குரியதொரு விடயமல்ல. ஆனால் உண்மை இதுவல்ல,

பாணந்துறை பகுதியில் ஒரு பகுதியில் உள்ள மின்பிறப்பாக்கியில் குரங்கு மோதினால் அந்த பகுதிக்கு மாத்திரமே மின்விநியோகம் பாதிக்கப்படும். முழு இலங்கைக்குமான மின்கட்டமைப்புக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது.

மின்விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது.இந்த உண்மையை மறைப்பதற்காகவே அரசாங்கம் குரங்கை குற்றஞ்சாட்டுகிறது.

நாளாந்த மின்னுற்பத்தியை காட்டிலும் மின்பாவனைக்கான கேள்வி அதிகளவில் காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 70 சதவீத இயற்கை மின்னுற்பத்திக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கிரீன் எனர்ஜி திட்டத்துக்கமைய சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி ஊடாக 2600 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் ஒன்றிணைக்க முடியும் என்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆகவே இந்த அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12