கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்கள் அங்கு பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கட்டாரில் இருந்து வந்த இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்ற முற்றபட்டநிலையில் வங்கிகளில் அதனை மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து பயணிகள் பலர் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.