விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 05:20 PM
image

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிரபு மற்றும் புதுமுக நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விக்ரம் பிரபு, எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

உண்மை சம்பவங்களை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரிக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான தமிழ் கதை எழுதி இருக்கும் என்ற திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்களை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகும் எல். கே. அக்ஷய் குமார் - விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்', 'லியோ', விக்ரம் நடிப்பில் வெளியான 'மகான்' உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46