(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உத்தேச ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களுடைய முதலீடுகளுக்கு நேயம்மிக்க நிறுவனச் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக சட்டரீதியான பொறிமுறையை உருவாக்குவதற்காக இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடுகளை எட்டியுள்ளனர்.
உத்தேச ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதன் மூலம் ஐக்கிய அரபு எமிர் குடியரசின் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், முதலீடுகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு இயலுமை கிட்டியுள்ளது.
இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கிணங்க, 2025 உலக நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிர் குடியரசுக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM